திடீரென நீக்கப்பட்ட பிரபல ஐபில் அணியின் கேப்டன்! அவருக்கு பதில் புது கேப்டன் யார் தெரியுமா?

திடீரென நீக்கப்பட்ட பிரபல ஐபில் அணியின் கேப்டன்! அவருக்கு பதில் புது கேப்டன் யார் தெரியுமா?


Rajasthan royals IPL team captain changed

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 36 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இன்று மாலை மும்பை, ராஜஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதுவரை 3 மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள ராஜஸ்தான் அணி இனி வரும் அனைத்து போட்டிகளில் வெற்றிபெற்றாலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினம். அதேபோல் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் அடுத்த சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை.

IPL 2019

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரஹானே அதிரடியாக நீக்கப்பட்டு அந்த போருக்கு ஆஸ்திரேலிய வீரர் சிமித்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற ரஹானே, கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தான் அணியை பிளே ஆஃபிற்கு முன்னேற்றினார். பிளே ஆஃப் சுற்றில் தோற்று ராஜஸ்தான் அணி வெளியேறியது.

ஆனால் இந்த சீசனில் ராஜஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்தது, மேலும் சிமித்துக்கு விதிக்கப்பட்ட தடை முடிந்து மீண்டும் அவர் ராஜஸ்தான் அணியில் சேர்ந்துள்ளதால் இனி வரும் ஆட்டங்களில் சிமித் கேப்டனாக செயல்படுவார் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

IPL 2019