இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்த ராகுல் டிராவிட்! ஏன் தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
விளையாட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை நிராகரித்த ராகுல் டிராவிட்! ஏன் தெரியுமா?

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட். தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். இந்தியா பலமுறை இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோது, முழு அர்ப்பணிப்போடு விளையாடி வெற்றிகளை குவித்துள்ளார். 
ராகுல் டிராவிட் தனது ஓய்விற்குப் பிறகு இளம் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து பல திறமையான வீரர்களை இந்திய அணிக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார். மேலும் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின்  தலைவராகவும் உள்ளார்.

2017 ஆம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிசிசிஐ ராகுல் டிராவிட்டை நியமிக்கலாம் என திட்டமிட்டிருந்ததாகவும்,  அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் பிசிசிஐ தலைவர் வினோத் ராய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, அனில் கும்ப்ளேவிற்கு பிறகு ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக்க முடிவு செய்தோம். ஆனால் அவர் நான் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிக்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்து எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியவில்லை. மேலும் தற்போது பயிற்சியாளராக பொறுப்பேற்றால்  என்னால் எனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாது.  எனக்கு வளர்ந்த இருமகன்கள் உள்ளனர. அவர்களுடன் நான் நேரத்தை செலவிட விரும்புகிறேன் என ஓபனாக கூறி தங்களது கோரிக்கையை மறுத்துவிட்டார். 

மேலும் டிராவிட்டின் கருத்தில் நியாயம் இருந்ததால் நாங்களும் அவரை வற்புறுத்தவில்லை. அவரிடம் தொடர்ந்து பேசி பிறகு அவர் இளம் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டார் என கூறியுள்ளார்.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo