இந்தியா விளையாட்டு

புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அணிகளுக்கிடையே ஆட்டம்.! புது ஜெர்சியில் காத்திருக்கிறேன்.! புஜாரா

Summary:

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதியில

உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 18ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இதற்காக கொரோனா விதிமுறையின் கீழ் வீரர்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தூணான புஜாராவும் மும்பையில் இருக்கும் ஹோட்டலில் தனிமைப்படுத்திக்கொண்டார்.


இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 2 ஆம் தேதி தனி விமானத்தில் இங்கிலாந்து செல்கிறது. இந்நிலையில் புஜாரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "இதுதான் புதிய கிட், மைதானத்தில் களமிறங்க காத்திருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.


Advertisement