நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக பி.டி.உஷா நியமனம்.! அவரை பற்றி பிரதமர் மோடி என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா.!

நாடாளுமன்ற ராஜ்யசபா எம்.பி.யாக பி.டி.உஷா நியமனம்.! அவரை பற்றி பிரதமர் மோடி என்ன கூறியுள்ளார் பார்த்தீங்களா.!


pt usha appointed as rajya sabah MP

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேபோல் தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா, சர்வதேச தடகள போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார். அவரது வெற்றிகளை கவுரவிக்கும் வகையில் இந்த பதவி அளித்து மத்திய அரசு பெருமைப்படுத்தி உள்ளது.


இந்தநிலையில், பி.டி.உஷாவுக்கு பிரதமர் மோடி அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், குறிப்பிடத்தக்க திறன் பெற்ற பி.டி.உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகிறது. அத்துடன் வளர்ந்து வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக கடந்த பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.