அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர்! பிசிசிஐ அதிரடி நடவடிக்கை
இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ப்ரித்திவ் ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியபட்டு 8 மாதம் தடை விதித்துள்ளது பிசிசிஐ.
19 வயது இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்திவ் ஷா இந்திய கிரிக்கெட் அணிக்காக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். துவக்க ஆட்டக்காரரான இவர் இந்திய அணிக்காக ஆடியுள்ள 3 இன்னிங்சில் 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்துள்ளார். அடுத்த சச்சின் இவர் தான் என்று பலரும் வர்ணித்தனர்.

இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இடம்பிடித்த ப்ரித்திவ் ஷா பயிற்சி ஆட்டத்தின் போது ஏற்பட்ட காயத்தால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடினார்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூர் போட்டியான சயத் முஸ்தாக் அலி தொடரின் போது ப்ரித்திவ் ஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த 8 மாதங்கள் எந்த தொடரிலும் கலந்துகொள்ள ப்ரித்திவ் ஷாவிற்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது.