Breaking#: டெஸ்ட் போட்டியில் இருந்து ப்ரீத்திவ் ஷா நீக்கம்! BCCI அதிரடி

Breaking#: டெஸ்ட் போட்டியில் இருந்து ப்ரீத்திவ் ஷா நீக்கம்! BCCI அதிரடி



prithiv-sha-given-rest-from-1st-test

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயற்சித்த போது ஏற்பட்ட காயத்தால் ப்ரீத்திவ் ஷா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 

Adelide test

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

Adelide test 

டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆனது. துவக்க ஆட்டக்காரர் ப்ரித்திவ் ஷா, விராட்கோலி உள்பட 5 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவன் அணி இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் 4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்தது.

அதனைத்தொடர்ந்து இன்று தொடங்கிய மூன்றாவது நாள் ஆட்டத்தின் 15வது ஓவரில் சிக்சருக்கு சென்ற பந்தை தடுத்து கேட்ச் பிடிக்க முயற்சித்த போது கீழே விழுந்ததில் ப்ரித்திவ் ஷாவின் இடது கால் முட்டியில் அடிப்பட்டது. அதன் பின்னர் அவரை மருத்துவனைக்கு அழைத்து சென்றனர். 

இந்நிலையில் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் குணமாக சில நாட்கள் ஆகும் என்பதால் 6ஆம் துவங்க இருக்கும் முதலாவது டெஸ்டிலிருந்து ப்ரித்திவ் ஷாவை BCCI நீக்கியுள்ளது. அவருக்கு பதிலாக யார் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக இறக்கப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. 

உள்நாட்டில் சிறப்பாக ஆடிய ப்ரித்திவ் ஷா முதல் முறையாக வெளிநாட்டு மண்ணில் ஆடவிருந்த நிலையில் இப்படி நடந்த துரதிருஷ்டத்தால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த எதிர்காலம் இவர் தான் என சில நாட்களுக்கு முன்பு சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.