விளையாட்டு WC2019

இந்திய அணியை நினைத்து பெருமையாக உள்ளது! பிரமர் மோடியின் ஆறுதல் வார்த்தைகள்

Summary:

Pm modi ptaises team india

2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

கோப்பையை வென்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்த இந்திய வீரர்களுக்கும், இந்திய அணி மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என்ற கனவில் இருந்த இந்திய ரசிகர்களுக்கும் இன்றைய நாள் மிகவும் சோகமாய் முடிந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்துள்ளார். அதில், "மிகவும் ஏமாற்றமான முடிவு! ஆனால் கடைசி வரை போராடிய இந்திய அணியினரின் உறுதி மிகவும் நன்றாக இருந்தது.

இந்த தொடர் முழுவதும் பேட்டிங் பவுலிங் மற்றும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியை நினைத்து பெருமையாக உள்ளது. வாழ்க்கையில் தோல்வியும் சகஜமே. இனி வரும் காலங்களில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்!" என பதிவிட்டுள்ளார். 


Advertisement