விளையாட்டு WC2019

WC2019: முதல் போட்டியில் ஆடும் அந்த 11 இந்திய வீரர்கள் யார் யார்?

Summary:

Playing IX of India against SA

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய உலககோப்பை தொடரில் இந்தியாவை தவிர மற்ற அனைத்து அணிகளும் ஏற்கனவே ஆடிவிட்டன. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் ஆடுகிறது.

சௌத்தம்பட்டில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. ஏற்கனவே 2 போட்டிகள் ஆடி இரண்டிலுமே தோல்வியை தழுவிய தென்னாப்பிரிக்கா அணி இன்றைய போட்டியில் வென்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்குகிறது.

உலகக்கோப்பையை இந்திய அணி மீண்டும் வெல்லும் என்ற நம்பிக்கை ஒட்டுமொத்த இந்திய ரசிகன்களுக்கும் இருந்து வருகிறது. முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை தந்து ரசிகர்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய அணி நிச்சயம் சிறப்பாக ஆடும்.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் ஆடும் அணி வீரர்கள் விவரம்:

இந்தியா XI:
ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி, கேஎல் ராகுல், தோனி, கேதன் ஜாதவ், ஹார்டிக் பாண்டியா, புவனேஷ்வர், சாகல், குல்தீப், பும்ரா

தென்னாப்பிக்கா IX:
டிகாக், ஆம்லா, டூப்ளஸிஸ், டூசன், மில்லர், டுமினி, மோரிஸ், ரபடா, பெலுக்வயோ, இம்ரான் தாஹிர், ஷாஸ்மி


Advertisement