9 ரன்களில் 10 விக்கெட்டையும் இழந்த கிரிக்கெட் அணி.. இப்படியொரு மோசமான சாதனை..!Philippines Vs Thailand Women T20 Match

 

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் பெண்களுக்கான SEA T20 போட்டித்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இன்று பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதிக்கொண்டன. 

ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பிலிப்பைன்ஸ் அணி 11.1 ஓவர் வரை ரன்கள் அடிக்க இயலாமல் கடுமையாக திணறி மொத்தமாக 9 ரன்கள் மட்டுமே எடுத்து. பிலிப்பைன்ஸ் அணியை சேர்ந்த 6 வீராங்கனைகள் டக் அவுட் ஆகினர். 

இதனால் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தாய்லாந்து அணி, 0.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி அடைந்தது. பெண்களுக்கான SEA தொடரில் கம்போடியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, மியான்மர் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டு அணிகள் மட்டுமே விளையாடி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.