தினமும் 90 மைல் வேகமா!பந்து வீச்சாளர்கள் ஒன்றும் ரோபோ கிடையாது.. ஜோப்ரா ஆர்ச்சர்

தினமும் 90 மைல் வேகமா!பந்து வீச்சாளர்கள் ஒன்றும் ரோபோ கிடையாது.. ஜோப்ரா ஆர்ச்சர்


No-one-is-a-robot-Jofra-Archer-on-being-outpaced

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 326 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணியில் மிக சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இருந்த போதிலும் அவர்களால் முதல் செசனில் மட்டுமே பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடிந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு தொடங்கும் இரண்டாவது செசனில் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு அந்த அளவிற்கு இல்லை.

No one robot

இதுகுறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், நாங்கள் நினைத்தது போல் ஆட்டம் செல்லவில்லை. எங்களுடைய ஏராளமான பந்துகள் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகியது. ஆனால் அவைகள் கேட்ச்-ஆக மாறவில்லை. 

ஒவ்வொரு நாளும் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீச யாராலும் முடியாது. இங்கு யாரும் ரோபோ கிடையாது. இந்த ஆடுகளம் பந்தை பவுன்ஸ் செய்வதற்கானதாக இருக்கவில்லை. காலையில் மட்டும் நன்கு விளையாட முடிந்தது. அதன்பிறகு பந்து சூழல ஆரம்பித்தது என்றார்.