விளையாட்டு

எந்த மாற்றமும் இல்லை.. துணிச்சலுடன் களமிறங்கியுள்ள தோனியின் படை வெல்லுமா!

Summary:

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

ஐபிஎல் 2020 டி20 கிரிக்கெட் தொடரின் 18 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணியில் வீரர்களை மாற்றி இறக்குவதற்கான வாய்ப்பு இருக்கும் என பலரும் எண்ணினர். குறிப்பாக கேதர் ஜாதவிற்கு பதிலாக ஜெகதீசன் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய போட்டியில் சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் அணியை பொறுத்தவரை மந்தீப் சிங், ஜோர்டன் மற்றும் ஹர்ப்ரீத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மயங் அகர்வால் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர்.


Advertisement