அறிமுக போட்டியிலேயே அசால்டாக இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்.. இங்கிலாந்து தடுமாற்றம்!

அறிமுக போட்டியிலேயே அசால்டாக இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்து வீரர்.. இங்கிலாந்து தடுமாற்றம்!


Newzland player Conway double ton in debut

இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கான்வே இரட்டை சதம் விளாசியுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று துவங்கியது. இந்த போட்டி நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவன் கான்வேவிற்கு முதல் டெஸ்ட் போட்டியாகும்.

துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய கான்வே முதல் நாளில் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். இரண்டாவது நாளான இன்றும் சிறப்பாக விளையாடி கான்வே அறிமுக போட்டியிலேயே முதல் இரட்டை சதத்தையும் விளாசினார்.

Eng vs nzஅறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய ஆறாவது வீரர் கான்வே ஆவார். அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த சாதனையை நிறைவேற்றியது மேலும் அவருக்கு பெருமையை தேடி தந்துள்ளது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 378 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட்டிங்கை துவங்கியுள்ள இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.