40 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து! துபாய் டெஸ்டில் பாக். வீரர் யாசிர் ஷா அபாரம்

40 ரன்களில் 10 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து! துபாய் டெஸ்டில் பாக். வீரர் யாசிர் ஷா அபாரம்


Newzland lost 10 wickets in 40 runs

துபாயில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

NzvsPak

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் கடந்த 24ம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஹரிஸ் சோகைல் மற்றும் பாபர் அசாமின் சிறப்பான சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 

NzvsPak

பின்னர் முதல் இன்னிங்சை துவங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராவல் மற்றும் லாதம் சிறப்பான துவக்கத்தை அளித்த முதல் விக்கெட் ஜோடி 50 ரன்கள் எடுத்தது. 31 ரன்கள் எடுத்த ராவல் யாசிர் ஷா பந்தில் அவுட்டானார். 

NzvsPak

முதல் விக்கெட்டை எடுத்த யாசிர் ஷா அடுத்தடுத்து வந்த நியூசிலாந்து பேட்ஸ்மன்களை சீட்டு கட்டு போல் ஒவ்வொன்றாக சறிக்க துவங்கினார். 51 -90 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் 5 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகினர். கேப்டன் வில்லியம்சன் மட்டும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 28 ரன்கள் எடுத்திருந்தார். 

NzvsPak

பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் அரங்கில் முதல் விக்கெட்டுக்கு 50 எடுத்து 100 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த முதல் அணி நியூசிலாந்து தான். இதற்கு முன்னர் 1992 ஆம் இதேபோல் இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து அணி பெற்ற 102 ரன்கள் இதுவரை சாதனையாக இருந்தது. 

பாலோ ஆணை தவிர்க்க முடியாத நியூசிலாந்து அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது. கடைசி நிலவரப்படி 34 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்துள்ளது.