விராட் கோலியின் கதையை நான்தான் முடிக்க வேண்டும்! நியூசிலாந்து வீரர் ஓப்பன் டாக்!

New Zealand Bowler Talk About Virat


New Zealand Bowler Talk About Virat

காயம் காரணமாக ஓய்வில் இருந்த நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடும் நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மெல்போர்னில் நடைபெற்ற பாக்சிங் டே டெஸ்டில் விளையாடிய டிரென்ட் போல்டுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவுக்கு எதிரான டி -20, ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான நியூசிலாந்து அணியில் போல்ட் இடம் பெறவில்லை.

virat

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 21- ஆம் தேதி வெலிங்டனில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் விளையாட டிரென்ட் போல்ட் உடற்தகுதி பெற்றுள்ளார். 

இந்நிலையில், விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்துவதற்காக வெயிட் பண்ண முடியாது என டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார். மேலும், விராட் தலைசிறந்த வீரர். அவர் எப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார் என்பது அனைவருக்கும் தெரியும். கோலியின் விக்கெட்டை வீழ்த்த போகிறேன் என்ற பேராவலுடன் காத்திருக்கிறேன் என டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.