இந்திய அணியை பழிதீர்க்க 3 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் களமிறக்கப்படும் முக்கிய வீரர்.!

இந்திய அணியை பழிதீர்க்க 3 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் களமிறக்கப்படும் முக்கிய வீரர்.!



new player in england team

 

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தநிலையில், இந்திய அணிக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து அணி இரண்டாவது டெஸ்டில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வருகிற 25-ஆம் தேதி லீட்சில் 3வது டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் இங்கிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்தநிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் சொதப்பிய டாம் சிப்லே, ஜேக் க்ராவ்லே ஆகியோர் அடுத்த போட்டிக்கான இங்கிலாந்து அணியில் நீக்கப்பட்டுள்ளனர். 

dawid malan

இந்நிலையில், இங்கிலாந்து அணியில் டேவிட் மாலன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். டேவிட் மாலன் கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கடைசியாக விளையாடினார். அதன்பிறகு மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் அவர் தேர்வு செய்யப்டவில்லை. தற்போது 3வது டெஸ்ட் போட்டிக்கான அணியில் டேவிட் மாலன் தேர்வாகியுள்ளார். 

இதுகுறித்து பயிற்சியாளர் சில்வர்உட் கூறுகையில், டேவிட் மாலன் அனைத்து விதமான போட்டிகளிலும் திறமை படைத்தவர். லீட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3-வது டெஸ்டில் மலான் சிறப்பாக விளையாடுவார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் 15 வீரர்கள் கொண்ட பட்டியல்:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனாதன் பேர்ஸ்டோவ், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கரன், ஹசீப் ஹமீத், டான் லாரன்ஸ், சகிப் மஹ்மூத், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், ஆலி போப், ஆலி ராபின்சன், மார்க் வுட்.