காயம் காரணமாக வெளியேறிய டான் ரோஹித்! அவருக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர் யார்?

காயம் காரணமாக வெளியேறிய டான் ரோஹித்! அவருக்கு பதிலாக களமிறங்கும் இளம் வீரர் யார்?


new player for rohit sharma

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து காயமடைந்த இந்திய துவக்க வீரர் ரோஹித் ஷர்மா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டியை 5 - 0 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. டி20 போட்டியை அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. 

இந்நிலையில் கடைசி டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ரோஹித் ஷர்மா நியூசிலாந்துக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்தநிலையில்,  இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை ஹாமில்டனில் துவங்குகிறது.

இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய ரோஹித் ஷர்மாவிற்கு  பதிலாக மாயங்க் அகர்வால் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.