விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இளம் நட்சத்திர வீரர்! என்ன காரணம்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இளம் நட்சத்திர வீரர்! என்ன காரணம்.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான பென் கூப்பர் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.

2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த பென் கூப்பர் கடைசியாக கடந்த ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடினார். பென் கூப்பர் நெதர்லாந்து அணிக்காக 13 ஒருநாள் போட்டியிலும், 58 இருபது ஓவர் போட்டியிலும் விளையாடி உள்ளார்.

ஓய்வு குறித்த தனது ட்விட்டர் பகத்தில் பென் கூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இன்று, நான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக ஆரஞ்சு ஜெர்சியை அணிந்து நெதர்லாந்து அணிக்காக விளையாடியதை மிகவும் கௌரவமாகவும் மற்றும் பாக்கியமாக கருதுகிறேன்.

நெதர்லாந்து கிரிக்கெட் உடனான எனது பயணம் முழுவதும் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. நான் என் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டிய நேரம் இது என பென் கூப்பர் தெரிவித்துள்ளார். பென் கூப்பரின் இந்த திடீர் முடிவு நெதர்லாந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    


Advertisement