இதுதான் இந்திய அணிவீரர்களின் ஒற்றுமை..காயமடைந்த ஜடேஜாவுக்காக நவ்தீப் சைனி செய்த காரியம்.. வைரல் வீடியோ

இதுதான் இந்திய அணிவீரர்களின் ஒற்றுமை..காயமடைந்த ஜடேஜாவுக்காக நவ்தீப் சைனி செய்த காரியம்.. வைரல் வீடியோ


Navdeep saini peel banana for jadeja viral video

காயம் காரணமாக வாழைப்பழத்தை உரித்து சாப்பிட சிரமப்பட்ட ஜடேஜாவுக்கு நவ்தீப் சைனி வாழைப்பழத்தை உரித்து கொடுக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்துள்ளது. சிட்னியில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பேட்டிங் செய்த போது அவரது கட்டை விரலில் காயம் ஏற்பட்டது.

இதனால் ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்சில் பந்துவீசாமல் விலகினார். இந்நிலையில் இன்றைய இன்னிங்ஸின்போது இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தநிலையில் அஸ்வின் மற்றும் விஹாரி களத்தில் நின்று ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை எதிர்த்து இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றினர்.

இதனிடையே இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் விக்கெட்டை இழந்தால், அடுத்ததாக விளையாடுவதற்காக ஜடேஜா தயாராக சிட்னி மைதானத்தின் பால்கனியில் அமர்ந்திருந்த போது, ஊழியர்கள் அவருக்கு சாப்பிடுவதற்காக வாழைப்பழம் வழங்கினார்.

தனது கட்டைவிரலில் அடிபட்டிற்கும்நிலையில் அந்த வாழைப்பழத்தை எடுத்து உரித்து சாப்பிட முடியாதநிலையில் ஜடேஜா அந்த வாழைப்பழத்தை தனது அருகில் அமர்ந்திருந்த இந்திய வீரர் நவ்தீப் சைனியிடம் கொடுக்க, அவர் அந்த வாழைப்பழத்தை உரித்து ஜடேஜாவிடம் கொடுக்கிறார். இந்த காட்சிகள் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகிவருகிறது.