ஐபிஎல் தொடரா.? டெஸ்ட் தொடரா? 1 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிரபல வீரர் எடுத்த முடிவு.!

ஐபிஎல் தொடரா.? டெஸ்ட் தொடரா? 1 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட பிரபல வீரர் எடுத்த முடிவு.!


mustafizur-rahman-first-preferences-to-country

வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐபிஎல் ஏலத்தில் முஷ்டாபிஜுர் ரஹ்மானை ஒரு கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. ஆனால் வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கையுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.

இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜுர் ரஹ்மான் கூறுகையில், இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடும்படி தெரிவித்தால் கட்டாயம் நாட்டிற்காக விளையாடுவேன் என தெரிவித்துள்ளார்.

ipl

வங்கதேச கிரிக்கெட் போர்டு என விரும்புகிறதோ, அதை நான் செய்வேன். அவர்கள் என்னை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட கேட்டுக்கொண்டால், நான் கட்டாயம் விளையாடுவேன். என்னுடைய முதல் முன்னுரிமை நாட்டிற்காக தான் இருக்கும் என கூறியுள்ளார்.