டெல்லியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை அணி! இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்!Mumbai indians won delhi capitals by 40 runs

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 34 போட்டிகள் இதுவரை முடிந்துள்ள நிலையில் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மும்பை அணி இரண்டாவது இடத்திற்கும், டெல்லி அணி மூன்றாவது இடத்திற்கும் சென்றுள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் டெல்லி, மும்பை அணிகள் மோதின. டெல்லி அணியின் சொந்த மண்ணில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி 40 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 168 ரன் எடுத்து. மும்பை அணியில் அதிகபட்சமாக குறுநல் பாண்டியா 37 ரன் எடுத்தார்.

IPL 2019

169 என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக தவான் மட்டும் 35 ரன் எடுத்தார். இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன் மட்டுமே எடுத்து டெல்லி அணி தோல்வியை தழுவியது.

இதற்கு முன்னர் நடந்த இரண்டு ஆட்டத்தில் டெல்லி அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டவது இடத்திற்கு முன்னேறியுள்ளது மும்பை அணி.

IPL 2019