விளையாட்டு

மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹோட்டலில் தனிமை.. அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்!

Summary:

Mumbai indians quarantine players at hotel

ஐபிஎல் தொடருக்கான டைடில் ஸ்பான்ஸரில் இருந்து விவோ விலகியதால் அடுத்த ஸ்பான்ஸரை பிடிக்கும் வேட்டையில் பிசிசிஐ களமிறங்கியுள்ளது. அது ஒருபுறம் இருந்தாலும் ஒவ்வொரு அணியும் தங்கள் வீரர்களை பாதுகாப்பாக அழைத்து செல்லும் பணியினை துவக்கிவிட்டன.

மும்பை இந்தியன்ஸ் அணி தனது வீரர்கள் அனைவரையும் ஹோட்டலில் தனிமைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு தினமும் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் நேவி மும்பை மைதானத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர் எனவும் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அடுத்த இரண்டு வாரங்களுக்கு அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தொடர்ந்து கொரோனா சோதனை செய்ய முடிவு செய்துள்ளது. மற்றொரு அணியானது அனைத்து வீரர்களையும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு உத்தவிட்டுள்ளது.

சென்னை அணியை பொறுத்தவரை ஆகஸ்ட் இரண்டாம் வாரம் UAE புறப்பட முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து இந்திய வீரர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யவுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Advertisement