தோனியின் வெறித்தனமான ரசிகன்! இரும்புவேலியை தாண்டி ரசிகன் செய்த செயல்! அதிர்ச்சியடைந்த தோனி!msd fan fell on Dhonis feet

சென்னையில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியின்போது, திடீரென மைதானத்திற்குள் ஓடிவந்த ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றையதினம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பயிற்சி ஆட்டத்தில் தோனி, முரளி விஜய், அம்பாத்தி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஸ் சாவ்லா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு எந்தவித சர்வதேச போட்டியிலும் விளையாடாத தல தோனியின் ஆட்டத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் நேற்று பயிற்சி ஆட்டத்தை பார்ப்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். 

Msd

இந்தநிலையில், சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ரசிகர் ஒருவர் இரும்பு வேலியை தாண்டி மைதானத்திற்குள் நுழைந்து, தோனியின்  காலில் விழுந்தார். இதனையடுத்து அந்த ரசிகரை பாதுகாப்பு ஊழியர்கள் பிடித்து எச்சரித்து வெளியே அனுப்பி வைத்தனர். அந்த ரசிகன் தோனியின் காலில் விழும்பொழுது தடுமாறி கீழே விழுந்ததால் தோனி அதிர்ச்சியடைந்து சற்று விலகிச்சென்றார்.