எனக்கும் கோபம் வரும்.. முதன்முறையாக மனம் திறந்த தல தோனி!

எனக்கும் கோபம் வரும்.. முதன்முறையாக மனம் திறந்த தல தோனி!


MS Dhoni talk about angry


இந்திய அணியின் முன்னாள் கேப்டன்  தோனி,  மூன்று விதமான கோப்பைகளையும் இந்திய அணிக்காக வாங்கி பெருமைப்படுத்தியவர். இவர் கடந்த உலகக் கோப்பை தொடருக்கு பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. 

2007 டி20 உலகக் கோப்பை, 2011 உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன் டிராபி என மூன்று விதமான உலகக் கோப்பையை வென்று தாயகத்திற்கு பெருமை சேர்த்தவர் தல தோனி. களத்தில் தனி ஒருவராக இருந்து பரபரப்பான இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். தல தோனியால் ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு தனி கெத்து உண்டு.

மைதானத்தில் எந்தவொரு பரபரப்பான சூழ்நிலையிலும் கூட பொறுமையாக நிதானமான முடிவை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இவர் உலகக் கோப்பை போட்டிகளுக்கு பின்பு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிப்பார் என பலர் கருத்து தெரிவித்து வந்த நிலையில், போட்டிகள், நிகழ்ச்சிகள் என எதிலும் கலந்துகொள்ளாமல் ஓய்வெடுத்து வருகிறார்.

Msd

தற்போது முதன்முறையாக தனியார் தொலைக்காட்சியில் பேசியுள்ளார். அதில், “களத்தில் எனக்கும் கோபமும், விரக்தியும் ஏற்படும். ஆனால் அதிகப்படியான விரக்தியை வெளிப்படுத்தினால் அணியின் தவறான போக்கிற்கு வழிவகுக்கும். மேலும் மற்றவர்களை விட கோபத்தை கட்டுபடுத்துவதில் சிறப்பாக இருப்பதால், எனது கோபம் வெளியே தெரியவதில்லை. 

நானும் சில நேரங்களில் கோபம் அடைவேன். எனினும் அதிலிருந்து விரைவில் மீண்டுவிடுவேன். ஒரு பிரச்னையை ஆராய்வதைவிட அதற்கான தீர்வை தேடுவதையே நான் நினைப்பேன். அதுவே எனது உணர்ச்சிகளை கட்டுபடுத்துவதற்கான சிறப்பான வழியாக நான் கருதுகிறேன் என பேசியுள்ளார்.