கிரிக்கெட்டுக்கு ரெஸ்ட்! ராணுவத்தில் களமிறங்கிய தல தோனி!

கிரிக்கெட்டுக்கு ரெஸ்ட்! ராணுவத்தில் களமிறங்கிய தல தோனி!


MS Dhoni in armi


ராணுவத்தின் மீதும் நாட்டின் மீதும் அதிக பற்று கொண்டவராக இருக்கும் கேப்டன் தோனி இரு மாதம், துணை ராணுவப்படையில் இணைந்து சேவை செய்ய உள்ளார். இதை இந்திய கிரிக்கெட் போர்டிடம் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்து வெளியேறியது. அன்று முதல் இந்திய அணியின் மிக முக்கிய விரரும், மூத்த வீரருமான தல தோனியின் ஓய்வு குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

Msd

இந்தநிலையில் தோனி துணை ராணுவப்படையில் இணைந்து சேவையாற்ற இந்திய கிரிக்கெட் வாரியமும் அவருக்கு அனுமதி கொடுத்துள்ளது. கடந்த உலக கோப்பை வென்ற பிறகு, இந்திய துணை ராணுவப்படையின் பாராசூட் பிரிவில் தோனி கவுரவ "லெப்டினென்ட் கர்னல்" ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தோனி, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலிருந்து  விலகியுள்ளார். அவர் தனது பாராமிலிட்டரி படையுடன் 2 மாதங்கள் பணியாற்ற உள்ளார். தல தோனி கிரிக்கெட்டிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை. அவர் இரண்டு மாதங்கள் மட்டும் ஓய்வில் செல்கிறார். அதன் பின்னர் மீண்டும் அணிக்கு திரும்புவார்.