விளையாட்டு

பயணிக்கு பிசினஸ் கிளாஸை விட்டுக்கொடுத்து எகனாமிக் கிளாஸில் அமர்ந்த தோனி! என்ன காரணம் தெரியுமா? அது தான் தல.!

Summary:

MS Dhoni gave up business class seat to him on Dubai flight

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. வரும் செப்டம்பர் 19ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகிறது. இதில் பங்கேற்பதற்காக சிஎஸ்கே அணியினர் நேற்று துபாய் சென்றனர்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட 16 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் தனி விமானத்தில்அழைத்து செல்லப் பட்டனர் .விமானத்தில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதில், கிரிக்கெட்டில் எல்லா சாதனையும் படைத்த ஒருவர் என்னிடம் வந்து, உங்கள் கால்கள் மிகவும் நீளமாக இருக்கிறது, நீங்கள் என்னுடைய பிசினஸ் கிளாஸ் இருக்கையில் அமருங்கள், நான் எக்கனாமி கிளாஸில் அமர்கிறேன் என்று கூறினார். கேப்டன் என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்துவார் என பதிவிட்டுள்ளார் ஜார்ஜ்.


Advertisement