நேற்றைய போட்டியில் நடுவர்களிடம் கோபப்பட்ட தோனி.! என்ன காரணம்.?

நேற்றைய போட்டியில் நடுவர்களிடம் கோபப்பட்ட தோனி.! என்ன காரணம்.?


ms-dhoni-angry-on-umpire

2020 ஐபிஎல் தொடரின் நான்காவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்திருந்தது. 

ராஜஸ்தான் அணியின் டாம் குரான் 9 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்த நிலையில், அவருக்கு கொடுக்கப்பட்ட அவுட் சர்ச்சையை ஏற்படுத்தியது. 18வது ஓவரின் 5வது பந்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சாஹர் வீசினார். அந்தப் பந்து குரானின் பேட்டில் பட்டு, தோனியின் கைக்கு கேட்ச் போனது போலஇருந்ததால் தோனியும், சாஹரும் அவுட் கேட்டனர் இதையடுத்து இரண்டு நடுவர்கள் ஆலோசித்து அவுட் என அறிவித்தனர்.

MS Dhoniஆனால் ராஜஸ்தான் அணியிடம் ரீவிவ் ஆப்ஷன் இல்லாததால் அவர்களால் ரிவீவ் கேட்க முடியவில்லை. ஆனால் 3வது அம்பயரை ஆலோசித்த நடுவர்கள், பந்து பேட்டில் படமால் காலில் கட்டியிருந்த பேடில் பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் மீண்டும் டாம் குரான் அவுட் ரத்து செய்யப்பட்டு அவர் மீண்டும் பேட்டிங் செய்யவந்தார். அப்போது நடுவர்களிடம் தோனி சென்று கோபத்துடன் முதலிலேயே 3வது நடுவரை சோதிக்காமல் ஏன் அவுட் கொடுத்தீர்கள்? அவுட் கொடுத்த பின்னர் தற்போது எப்படி ரிவீவ் செய்தீர்கள் என கேள்வி எழுப்பினார்.