"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
தோனி வேண்டுமென்றே தான் அரையிறுதியில் அடிக்கவில்லை - முன்னாள் வீரரின் தந்தை பரபரப்பு குற்றச்சாட்டு.!
12வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்சமயம் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்துள்ளது. உலகமே ஆவலோடு எதிர்நோக்கியிருந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இந்த உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று பலரும் ஆரூடம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அதனை வெல்லும் கனவோடு இங்கிலாந்து புறப்பட்டுச் சென்ற இந்திய அணி லீக் போட்டிகளில் சிறப்பாக அரை இறுதி வரை முன்னேறியது. ஆனால் யாரும் எதிர்பாராத நிலையில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது.
இப்போட்டியில் கடைசி வரை களத்தில் நின்ற தோனி, கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது அடுக்கடுக்கான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. தொடர்ந்து தோனி ஓய்வு பெறவேண்டும் என்ற கலவையான கருத்தும் நிலவியது. மேலும் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தோனியை மறைமுகமாக தாக்கி பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜின் தந்தை யோகராஜ் தோனியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தோனி குறித்து அவர் பேசும்போது:
தோனி வேண்டுமென்றே தான் நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கை எட்ட உதவவில்லை. தன்னை தவிர வேறு எந்த கேப்டனும் உலகக்கோப்பையை வென்று பேரும்
புகழும் பெற்றுவிடக் கூடாது என்பது தான் அவருடைய எண்ணம். ஜடேஜா சிறப்பாக ஆடி 77 ரன்களை எடுக்கும்போது தோனி தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வேண்டுமென்றே நழுவவிட்டார்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜடேஜா விடம் அதிரடியாக ஆடு என்று ஆலோசனை கூறுகிறார். முன்னதாக சுழல்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆடிக்கொண்டிருந்த ஹர்திக் பாண்டியாவிடமும் அதே ஐடியாவை கொடுத்து அவுட்டாக்கி உள்ளார். ஆனால் அதைத்தான் செய்ய மறுக்கிறார். யுவராஜ் அவரை போல எந்த வீரரிடமாவது சென்று, `அதிரடியான ஆட்டத்தை ஆடு’ என்று கூறியிருப்பாரா? என்று மகேந்திர சிங் தோனியை யோகராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால், தோனி மீது அவர் குற்றம்சாட்டுவது இது முதன்முறையில்லை. ஏற்கெனவே பலமுறை தோனியின் மீதான தனது அதிருப்தியை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.