நீங்கள் சென்னை வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தோனி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!

நீங்கள் சென்னை வருவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் தோனி.! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து.!


mk stalin wishes to ms dhoni

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு ஜூலை 7ஆம் தேதியான இன்று 41வது பிறந்தநாள் ஆகும், இந்திய மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற வீரரான அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆகியவற்றை பெற்று தந்தார்.

2004ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி 90 டெஸ்ட், 350 ஒருநாள், 98 டி20 போட்டிகளில் விளையாடி 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்துள்ளார். தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருவதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்களும், கிரிக்கெட் உலகைச் சேர்ந்தவர்களும், பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "பிறந்தநாள் வாழ்த்துகள் தோனி.!! உங்கள் இணையற்ற சாதனைகள், எளிய கிராமப்புற பின்னணியில் இருந்து வரும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் தங்கள் கனவுகளைத் தொடர நம்பிக்கையை அளித்துள்ளது. எங்கள் சொந்த மண்ணில் (சென்னையில்) நீங்கள் மீண்டும் விளையாடுவதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்" என  பதிவிட்டுள்ளார்.