மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கர்லா கட்டை பயிற்சி.!

Summary:

பெண்களின் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கர்லா கட்டை பயிற்சி.!

தமிழ் மன்னர்கள் பழங்காலத்தில் போர்க்கலையில் சிறந்து விளங்கியதற்கான பல்வேறு வரலாற்று சான்றுகள் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளன. தற்காப்பு கலைகளிலும் முன்னோடியாக இருந்த தமிழர்களின் பல கலைகள், நாகரீக வளர்ச்சியின் காரணமாக அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுவிட்டது. ஆனால், சிலர் அதனை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த செந்தில் கண்ணன் பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்து, அதனை இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். தமிழ் சங்கம் உலகளவில் உச்சத்தை தொட போர்க்கலைகள் அன்றைய நாட்களில் ஆணிவேராக இருந்தது. போர்க்கலை பயிற்சிக்கு முன்னர் உடலை தயார்படுத்த தேகப்பயிற்சியும் எடுக்கப்பட்டது. 

தேகப்பயிற்சிக்கு உபயோமாக இருந்த கர்லா கட்டை பயிற்சி, மனிதன் நினைத்த வகையில் உடலை வளைக்க உதவி செய்தது. இதனால் உடலும் மனதும் வலுப்பெற்று காணப்பட்டது. கர்லா கட்டை பயிற்சி பலருக்கும் மறந்துவிட்ட நிலையில், அதனை மீட்டெடுக்க செந்தில் கண்ணன் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்.

கர்லாவில் கை கர்லா, புஜகர்லா, தொப்பை கர்லா, குஸ்தி கர்லா, பிடி கர்லா, படி கர்லா என்று 6 வகை கர்லா பயிற்சிகள் உள்ளது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான பயன்கள் உள்ளன. கை கர்லா முதன் முதலாக பயிற்சியெடுக்க உதவி செய்கிறது. புஜகர்லா உடலின் புஜ பலத்தை அதிகரிக்கிறது. தொப்பை கர்லா தொப்பையை குறைக்க உதவி சேகரித்து. பிடி கர்லா போர் வீரர்களின் ஆயுதங்கள் பயன்படுத்தும் முறை ஆகும். குஸ்தி கர்லா என்பது குஸ்தி வீரர்களுக்கானது ஆகும். படி கர்லா என்பது பெண்கள் பயன்படுத்துவது ஆகும். 

கர்லாவில் உள்ள 64 சுற்றுகளில் ஒரு சுற்றை கற்றுக்கொண்டாலே வாழ்நாட்கள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ இயலும். செந்தில் கண்ணனின் பயிற்சி மையம் புதுச்சேரி பூரணாங்குப்பத்தில் ஜோதி குருகுலத்தில் அமைந்துள்ளது. இங்கு கர்லா கட்டை, சிலம்பம், கதை, சிலம்பு, மல்யுத்தம், வர்ம தெரபி, சித்தா, யோகா, தியானம் போன்று பல்வேறு பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

கலைகளை கற்றுக்கொள்ள வயது தடையில்லை என்பதை உறுதி செய்ய, விரும்பும் இருப்பவர்கள் கலைகளை கற்றுக்கொள்ளலாம். தனிநபரின் உடல் எடைக்கு ஏற்ப கருவிகளின் எடையும் மாறுபடுகிறது. கர்லா பயிற்சியை மேற்கொண்டால் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், கண்பார்வை குறைபாடு, வயிறு பிரச்சனை போன்றவை ஏற்படாது. பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள் தவிர்க்கப்படும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் குறைந்து, ஆரோக்கியமாக வாழலாம். 

நமது உடலுக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கிறது. பெண்கள் கர்லா பயிற்சி பெரும் பட்சத்தில், அவர்களின் உடல்நலம் மேம்படுகிறது. இளமையை தக்க வைக்கலாம்.


Advertisement