தென் ஆப்பிரிக்கா டி20 லீக்... ஏலத்தில் முக்கிய வீரர்களை தட்டி தூக்கிய சூப்பர் கிங்ஸ் அணி.! கேப்டன் யாருன்னு பார்த்தீங்களா.!

தென் ஆப்பிரிக்கா டி20 லீக்... ஏலத்தில் முக்கிய வீரர்களை தட்டி தூக்கிய சூப்பர் கிங்ஸ் அணி.! கேப்டன் யாருன்னு பார்த்தீங்களா.!


johannesburg super kings team player

ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் தென் ஆப்பிரிக்காவில் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரியில் நடக்கும் இந்த போட்டிக்காக உருவாக்கப்பட்ட 6 அணிகளையும் இந்தியாவை சேர்ந்த ஐ.பி.எல். கிரிக்கெட் அணிகளின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

இந்தநிலையில், ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிர்வாகம் வாங்கியுள்ளது. இதே போல் கேப்டவுன் அணி, மும்பை இந்தியன்சுக்கும், டர்பன் அணி லக்னோ சூப்பர் ஜெயன்ட்சுக்கும், செயின்ட் ஜார்ஜ் பார்க் அணி ஐதராபாத் சன்ரைசர்சுக்கும், பார்ல் அணி ராஜஸ்தான் ராயல்சுக்கும், பிரிட்டோரியா அணி டெல்லி கேப்பிட்டல்சுக்கும் சொந்தமாகிறது.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ள ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி முதல் கட்டமாக 5 முக்கிய வீரர்களான டுபிளசிஸ், மொயின் அலி, மகேஷ் தீக்ஷனா, ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோட்ஸிஎன 5 வீரர்களை ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அணியின் கேப்டனாக டுபிளசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மொயின் அலிஅணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் மற்ற வீரர்களை தேர்வு செய்வதற்கான ஏலம் நேற்று நடந்து முடிந்தது. இதில் ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணி சில அதிரடி வீரர்களை ஒப்பந்தம் செய்துள்ளது. சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் டுபிளசிஸ், மகீஷ் தீக்சணா, ரொமாரியோ ஷெப்பர்ட், ஜெரால்ட் கோயிட்சே, ஹாரி புருக், ஜென்னிமான் மாலன், ரீசா ஹெண்டரிக்ஸ், கையில் வெர்ரையின், ஜார்ஜ் கார்டன், அல்சாரி ஜோசப், லியூஸ் டுபிளாய், லீவிஸ் கிர்காரி, லிசாட் வில்லியம்ஸ், நாண்ட்ரே பர்கர், டோனோவன் பெராரியா, மலூசி சிபாடோ, கேலப் செலிகா ஆகிய வீர்கள் இடம்பெற்றுள்ளனர்.