நேற்றைய ஆட்டத்தில் மைதானத்திற்குள் தனது பேட்டால் கம்பு சுத்திய ஜடேஜா.! வைரல் வீடியோ.!

நேற்றைய ஆட்டத்தில் மைதானத்திற்குள் தனது பேட்டால் கம்பு சுத்திய ஜடேஜா.! வைரல் வீடியோ.!


jadeja-after-fifty-behaviour

2020 ஐபிஎல் 13 வது சீசன் போட்டியின் 14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் நேற்று மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு164 ஓட்டங்களை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 

165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் இரண்டு ஓவரில் வெறும் நான்கு ஓட்டங்களை எடுத்து ஒரு விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷேன் வாட்சன், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

சிறப்பாக ஆடிய சென்னை அணியின் ரவீந்திர ஜடேஜா 35 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தநிலையில் இந்த வருட ஐபிஎல்லின் அவரது முதல் பிப்டியை பதிவு செய்தார். அவர்  50 ரன்கள் கடந்த பிறகு அவரது பேட்டை கம்பு சுத்துவதுபோல் சுத்தி மகிழ்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் இறுதியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.