விளையாட்டு

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை குறித்து அறிவிப்பு!

Summary:

Ipl ticket in chennai chepak

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 23 ஆம் தேதி நடக்கவிருக்கும் சென்னை- பெங்களூரு அணிகள் மோதும் ஐபிஎல் லீக் முதல் போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை வரும் 16ல் துவங்கவுள்ளது.

ஐபிஎல் T20 தொடரின் 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி துவங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவுள்ள இந்த முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான 'நடப்பு சாம்பியன்' சென்னை அணி, கோலியின் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டிக்கான 'டிக்கெட்' விற்பனை வரும் 16ல் சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11:30 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை (உணவு இடைவேளை நீங்கலாக) நடக்கும். 'டிக்கெட்' இருந்தால், அடுத்த நாள் காலை 10 மணிக்கு விற்பனை துவங்கும். ஒரு நபருக்கு அதிகபட்சம் இரண்டு 'டிக்கெட்' மட்டுமே தரப்படுமாம். குறைந்தபட்ச விலையாக ரூ. 1300 அறிவிக்கப்படுள்ளது. இதன் பின், ரூ. 2500, ரூ. 5000, ரூ. 6500 என்ற விலையில் 'டிக்கெட்' விற்பனை செய்யப்பட உள்ளது.

'ஆன் லைன்' முறையில் 'டிக்கெட்' பெற விரும்புவோர் bookmyshow.com இணையதளத்தில் பெறலாம். சென்னை அணியின் சொந்த மண்ணில் நடக்கவுள்ள அனைத்து போட்டிகளுக்கான டிக்கெட்டையும் இந்த இணையதளத்தில் ரசிகர்கள் பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள போட்டிகளுக்கான 'டிக்கெட்' விற்பனை துவங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.


Advertisement