விளையாட்டு

புள்ளிப் பட்டியலில் டாப்பிற்கு சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.! புள்ளி பட்டியல் முழு விவரம்.!

Summary:

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-ல

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. ஐ.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் நேற்று மும்பையில் நடைபெற்றது. அந்த ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயான் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நயிட் ரைடர்ஸ் அணியும் மோதியது. 

அந்த ஆட்டத்தில் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை தோற்கடித்தது. நேற்றய ஆட்டத்தின் வெற்றி மூலம் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடத்தில இருந்த சென்னை அணி முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுவரை ஆடிய 4 ஆட்டங்களில் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. 

 ராயல் சேலஞ்ரஸ் பெங்களூரு அணி இதுவரை ஆடிய 3 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது. டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன்  மூன்றாம் இடத்தில் உள்ளது. அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஆடிய 4 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 4 ஆம் இடத்தில் உள்ளது. 

இதனையடுத்து இதுவரை ஆடிய 4 போட்டிகளில் ஆடியுள்ள சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணி தலா ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் 5 ஆம் மற்றும் 6 ஆம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7 ஆம் இடத்திலும் பஞ்சாப் அணி 8 ஆம் இடத்திலும் உள்ளது.


Advertisement