விளையாட்டு

இந்தமுறை ஐபில் கோப்பை இவங்களுக்குத்தான்..! பிரெட் லீ கூறிய அந்த அணி இது தான்..! உற்சாகத்தில் ரசிகர்கள்.

Summary:

IPL 2020 winning team prediction

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்னும் சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடங்க உள்ள நிலையில் இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்பது குறித்து தனது கணிப்பை கூறியுள்ளார் முன்னாள் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரெட் லீ.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து போட்டிகள் வரும் 19ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோத உள்ளன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக பிரபல கிரிக்கெட் வீரர் பிரெட் லீ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தற்போது மும்பை வந்துள்ளார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

IPL2020: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ...

அதில் ரசிகர் ஒருவர் இந்த ஆண்டு எந்த அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் என்ற கேள்விக்கு அதை சொல்வது மிகவும் கடினம் ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பிரெட் லீ பதிலளித்தார்.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் எனவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவின் மிகப்பெரிய ஆட்டத்தை காண தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்கள் தற்போதில் இருந்தே மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.


Advertisement