விளையாட்டு

4 முறை vs 3 முறை சாம்பியன்.. பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் துவங்குகிறது ஐபிஎல்!

Summary:

Ipl 2020 first match mumbai vs chennai

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் 2020 தொடரானது ஒத்திவைக்கப்பட்டது. தற்போது பல பாதுகாப்பு அம்சங்களுடன் ரசிகர்கள் அனுமதியின்றி யூஏஇயில் ஐபிஎல் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த தொடருக்கான வீரர்கள் அனைவரும் யூஏஇக்கு பாதுகாப்பு வளையத்துடன் அனுப்பி வைக்கப்பட்டனர். குவாரண்டைனுக்கு பிறகே பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்த தொடரின் முதல் போட்டி இன்று அபுதாபியில் துவங்கவுள்ளது. இந்திய நேரப்படி மாலை 7:30 மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இதுவரை நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் மும்பை அணி 4 முறையும் சென்னை அணி 3 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே தோனி மற்றும் ரோகித் மோதுவதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


Advertisement