விளையாட்டு

டாஸ் போட்டாச்சு..! சென்னை அணி பேட்டிங்கா? பீல்டிங்கா.? தோணி என்ன முடிவு செய்துள்ளார் பாருங்கள்.

Summary:

IPL 2020 first march CSK won toss and chose to field

இன்று நடைபெற இருக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. ஒருகட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்த நிலையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

The big fight: Here's a look at all the Mumbai Indians vs Chennai Super  Kings IPL finals

இதனையடுத்து இன்று நடைபெறும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோத உள்ளன.

முதல் போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துள்ளனர்.


Advertisement