இந்தியா விளையாட்டு

போங்க தம்பி எங்களுக்கேவா! மன்கட் முயற்சித்த குர்ணாலுக்கு தல தோனியின் பதிலடி.!

Summary:

ipl 2019 csk vs mi - thala dhoni - manket try kurunal

ஐபிஎல் சீசன் 12 தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மும்பையில் நடந்த போட்டியானது சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு 15 ஆவது லீக் போட்டியாக அமைந்தது.

நேற்றைய போட்டியில் டாஸ் வின்செய்த கேப்டன் தோனி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி பந்துவீசிய சென்னை அணி துவக்கத்தில் சிறப்பாக பந்து வீசி மும்பை அணியின் துவக்க விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது. இதனால் வெற்றி இலக்கு எளிதாக அமையும் என்று சென்னை ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால் கடைசி 2 ஓவர்களில் பேட்டிங் செய்த மும்பை அணியின் வீரர்களான ஹர்திக் பாண்டியா, பொல்லார்ட் இருவரும் சிஎஸ்கேவின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அந்த இரண்டு ஓவர்களில் மட்டும் 45 ஓட்டங்களை பெற்றனர். இதனால் சென்னை அணிக்கு வெற்றிக்கு இலக்கு 171 ரன்களாக அமைந்தது.

தொடர்ந்து விளையாடிய சென்னை அணிக்கு கேதார் ஜாதவ் 58, மட்டும் சிறப்பாக விளையாட மற்ற வீரர்கள் சொதப்பியதால் வெறும் 133 ரன்கள் மட்டும் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் தல தோனி பேட்டிங் செய்த போது அவரை மன்கட் முறையில் அவுட் செய்து விடுவேன் என எச்சரிக்கை விடுவது போல குர்ணால் பாண்டியா செய்ய நினைத்தார். ஆனால் தல தோனியோ கிரீஸை விட்டு வெளியே வரவில்லை, தன் பேட் உள்ளே தான் உள்ளது என தோரணையாக நின்றார்.


Advertisement