ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யுமா தல தோனியின் சிஎஸ்கே; ஹைதராபாத்துடன் இன்று பலபரிட்சை.!

ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யுமா தல தோனியின் சிஎஸ்கே; ஹைதராபாத்துடன் இன்று பலபரிட்சை.!


ipl-2019---today-match---33rd-leel---csk-vs-sunrishers

கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 11 சீசன் நிறைவு பெற்ற ஐபிஎல் தொடரானது 12 வது சீசன் தற்போது வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. போட்டியின் துவக்கத்திலிருந்து ரசிகர்களின் பேராதரவுடன் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதுவரை 32 லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 33 வது லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று இரவு 8:00 மணிக்கு மோதுகின்றன.  இதுவரை நடைபெற்ற 8 ஆட்டங்களில் 7 வெற்றியை பதிவு செய்து சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது.

IPL 2019

அதே வேளையில் தான் பங்கேற்று விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்து 4 போட்டிகளில் தோல்வியைத் தழுவி 6வது இடத்தில் ஹைதராபாத் அணி நீடிக்கிறது. போட்டியின் துவக்கத்தில் சிறப்பாக விளையாடி வெற்றிகளைப் பதிவு செய்த ஹைதராபாத் அணி கடைசி கட்ட போட்டிகளில் தோல்வியை தழுவி சறுக்கிய நிலையில் உள்ளது.

ஐதராபாத் அணியின் துவக்க மட்டையாளர்கள் சிறப்பாக விளையாடிகின்ற போதிலும் அதனை தொடர்ந்து களமிறங்கும் நடுகள வீரர்கள் தங்கள் திறமையை நிரூபிக்க தவறுவதால் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதனால் அந்த அணி டேவிட் வார்னர்,   போஸ்டேவ் போன்ற முன்னணி துவக்க வீரர்களை மட்டுமே நம்பியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தல தோனியின் சிறப்பான வழிநடத்தலால் அந்த அணி தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறது.

IPL 2019

சென்னை அணியை பொறுத்தவரையில் லுங்கி நெகிடி, பிராவோ போன்ற முன்னணி வீரர்கள் காயம் காரணமாக விளையாட போதிலும் அந்த அணியின் அனுபவ பந்துவீச்சின் மூலமாக அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் எதிரணிகளை திணறடித்து வருகின்றனர். அதேவேளையில் பேட்ஸ்மேன்களும் எந்த ஒரு வீரரை மட்டும் நம்பி இல்லை. ஒவ்வொரு போட்டிக்கும் யாராவது ஒரு வீரர் தங்களது திறமையை வெளிக்கொணர்ந்து அணியை வெற்றிபெற செய்கின்றனர்.

ஹைதராபாத்தில் சொந்த மண்ணில் இன்றைய போட்டி நடப்பது சன்ரைசர்ஸ் அணிக்கு சற்று ஆறுதலான விஷயமாக உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று அந்த அணி புள்ளி பட்டியலில் முன்னேற முனைப்புடன் செயல்படும். அதேவேளையில் சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை பெறும்.