தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் அணி படைத்துள்ள விசித்திர சாதனை; என்ன தெரியுமா?
இதுவரை விறுவிறுப்பாக நடைபெற்ற ஐபிஎல் 12வது சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. மும்பை, சென்னை, டெல்லி அணிகள் எளிமையாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. நான்காவது அணியாக முன்னேறுவது யார் என்று பல பரிட்சை நடந்த நிலையில் ஒரு வழியாக ஹைதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது.
நடந்து முடிந்த 54 ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் எளிமையான வாய்ப்பினை ஹைதராபாத் அணி தவறவிட்டது.
Here it is the #VIVOIPL Points Table after the league stage.
— IndianPremierLeague (@IPL) May 5, 2019
Onto the Playoffs now 😎😎 pic.twitter.com/FULlVTcOFJ
இதனால் நேற்று நடைபெற்ற மும்பை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி மிகவும் சுவாரசியமாக மாறியது. இப்போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு இருந்தது. ஆனால் மும்பை அணி இடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் ஹைதராபாத் அணி ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இதனால் ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே வெறும் 12 புள்ளிகள் பெற்று ‘ப்ளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற விசித்திர சாதனை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.