மலிங்கா விஸ்வரூபம் அடுத்தடுத்த 2 போட்டிகள் 10 விக்கெட்; எதிரணிகளை தெறிக்க விடும் பந்துவீச்சு.!

மலிங்கா விஸ்வரூபம் அடுத்தடுத்த 2 போட்டிகள் 10 விக்கெட்; எதிரணிகளை தெறிக்க விடும் பந்துவீச்சு.!


ipl-2019---srilanka---lasith-malinka---10-wickets

ஐபிஎல் தொடரில் பல ஆண்டுகளாக மும்பை அணியில் விளையாடியவர் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா. கடந்த வருடம் 11 வது சீசனில் போட்டிகளில் பங்கேற்காத மலிங்கா அந்த அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் இந்த ஆண்டு போட்டிகளில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

ஐபிஎல் தொடர் முடிந்ததும் உலகக் கோப்பைக்கான போட்டிகள் தொடங்க உள்ளது. இந்நிலையில் இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் உலக கோப்பை தொடருக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் கட்டாயமாக விளையாட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளது இலங்கை கிரிக்கெட் போர்டு.

IPL 2019

இந்நிலையில் பிசிசிஐயின் பரிந்துரையின் படி ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுமதி அளித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம். இதனை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பந்து வீசிய மலிங்கா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பிறகு இலங்கைக்கு சென்ற அவர் கண்டியில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் பங்கேற்று அப்போட்டியில் 49.5 ஓவர்களை வீசி அவர் 49 ரன்களை கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

IPL 2019

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பணிச்சுமையை பிசிசிஐ., உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் 35 வயதில் 12 மணி நேரத்தில் சுமார் 2 கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று 10 விக்கெட் கைப்பற்றி அசத்தியுள்ளார் மலிங்கா. இவருடைய இந்த திடீர் விஸ்வரூபம் எதிரணிகளை அச்சுறுத்தி உள்ளது என்றே கூறலாம்.