
ipl 2019 - srh vs dc - amith misrah - run out
2019 ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடஸ் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த விறுவிறுப்பான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் அடித்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரித்திவ் ஷா ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். டெல்லி அணி எளிதில் வென்றுவிடும் போல் தோன்றியது. ஆனால் ஒரு கட்டதத்தில் டெல்லி அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் ருத்ர தாண்டவம் ஆட, டெல்லி அருமையான வெற்றியை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் 6 பந்துக்கு 5 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பரபரப்பான நிலை உருவானது. கடைசி ஓவரை ஐதராபாத் அணியின் கலீல் அஹமது வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட அமித் மிஸ்ரா பந்தை அடிக்க முயன்றார். ஆனால் பந்து மட்டையில் படாமல் கீப்பர் வசம் சென்றது.
இருந்தாலும் ரன் ஓட முயற்சி செய்த அமித் மிஸ்ரா எதிர்முனையில் இருந்த ஸ்டெம்பை மறைத்தவாறு பிட்சின் குறுக்கே கிரிக்கெட் விதிமுறைக்கு எதிராக ஓடினார். பந்தை எடுத்து ஸ்டெம்பை நோக்கி எறிந்த கலீல் அகமதுவால் ஸ்டெம்ப் தெரியாததால் அவுட் செய்ய முடியவில்லை. இதனால் அவுட் கேட்டு நடுவரிடம் முறையிட்டனர் ஹைதராபாத் அணியினர்.
முடிவாக அவுட் கொடுக்கப்பட்டு அமித் மிஸ்ரா வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு பந்துகளை எதிர்கொண்ட கீமோ பால் பவுண்டரி அடித்ததால் ஒரு வழியாக டெல்லி அணி வெற்றி பெற்றது.
Advertisement
Advertisement