
ipl 2019 - shane watson - csk - bigboss t20 rest
உலகின் சிறந்த கிரிக்கெட் அணிகளின் ஒன்று ஆஸ்திரேலிய அணி. அந்த அணியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் திறமையாக செயல்பட்டு ஆல்-ரவுண்டராக ஜொலித்தவர் ஷேன் வாட்சன். கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அதன் பிறகு இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரை போன்று ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான பிக்பாஷ் டி20 தொடரில் பங்கேற்று ஆடினார். 4 ஆண்டுகளுக்கு முன்பு 'சிட்னி தண்டர்' அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் பல போட்டிகளில் அந்த அணியை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் தற்போது பிக்பாஷ் டி20 தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட விரும்பும் வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுத்துள்ளார். இந்த நேரத்தில் 'சிட்னி தண்டர்' அணியில் தன்னுடன் விளையாடிய வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு போட்டிகளிலிருந்து ஓய்வு முடிவை எடுத்துள்ள வாட்சன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 தொடர்களில் தொடர்ந்து விளையாடுவதாக தெரிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள அவர் சென்னை அணியின் முக்கிய வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement