தல தோனியா டான் ரோஹித்தா; இறுதி போட்டிக்கு யார்? லீக் சுற்று தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே?

ipl 2019 - qualiofier 1 - mi vs csk - today


ipl 2019 - qualiofier 1 - mi vs csk - today

ஐபிஎல் சீசன் 12 இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு எளிமையாக நுழைந்தது. நான்காவது அணியாக யார் முன்னேறுவது என்று பலபரீட்சை நடந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக கொல்கத்தாவை முந்தி ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றின் முதல் போட்டியாக முதல் இரண்டு இடங்களை பிடித்த சென்னை, மும்பை அணிகளுக்கு இடையே இன்று இரவு 7:30 மணி அளவில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

IPL 2019

சென்னை அணியை பொறுத்தவரை இந்த சீசனில் முதல் பகுதியில் தொடர் வெற்றிகளை குவித்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. ஆனால் பின்பகுதி ஆட்டங்களில் தொடர் தோல்விகளை சந்தித்ததால் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆனால் இதற்கு நேர் எதிராக செயல்பட்ட மும்பை அணியை பொறுத்தவரை பின்பகுதி ஆட்டங்களில் தொடர் வெற்றி பெற்றதன் மூலம் முதலிடத்தைப் பிடித்தது.

IPL 2019

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 26 முறை மோதியுள்ளது. அதில் மும்பை இந்தியன்ஸ் அணி 15 முறை வென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 11 முறை வென்றுள்ளது. 

கடந்த 2015 முதல் இரு அணிகளும் 8 முறை மோதியுள்ளது. அதில் மும்பை அணி 6 முறையும், சென்னை 2 முறை வென்றுள்ளது. நாக் அவுட் அல்லது ப்ளே ஆப் போட்டிகளில் இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளது. இதில் சென்னை 4 முறையும், மும்பை 3 முறையும் வென்றுள்ளது. 

IPL 2019

முன்னதாக குவலிபயர்-1 போட்டிகளில் பங்கேற்ற 4 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 முறை மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. மும்பை அணியை பொறுத்த வரையில் குவலிபயர்-1 போட்டிகளில் பங்கேற்ற 3 போட்டியில் 1 முறை மட்டுமே வெற்றி பெற்று நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. 

IPL 2019

இத்தொடரின் இரு அணிகள் மோதிய இரண்டு லீக் போட்டியிலும் மும்பை அணி, சென்னையை வீழ்த்தியது. சென்னை அணியை பொறுத்தவரையில் சொந்தமண்ணில் களமிறங்குவது ஆறுதலான விஷயம்.  இதனால் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.