ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு திடீர் மாற்றம்; சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்.!

ஐபிஎல் இறுதிப் போட்டி ஐதராபாத்துக்கு திடீர் மாற்றம்; சென்னை ரசிகர்கள் ஏமாற்றம்.!



ipl-2019---final-match-change---chennai-to-hydrabad

சென்னையில் நடக்கவிருந்த ஐபிஎல் இறுதிப்போட்டியானது திடீரென்று ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டுள்ளதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரானது, 11 சீசன் நிறைவடைந்து 12வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை 40 லீக் போட்டிகள் நிறைவடைந்து கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது 12வது சீசன் என்று கூறலாம். நேற்றைய போட்டியில் டெல்லி அணி, ராஜஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதன் மூலம் அந்த அணி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளதால் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு  தள்ளப்பட்டுள்ளது.

IPL 2019

இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெறும் பட்சத்தில் முதலிடத்தை பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளதால் இன்றைய போட்டியை காண சென்னை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், நாக் -அவுட் சுற்றுப்போட்டிக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
 
அதாவது, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முறையான அனுமதி பெறாமல் கட்டப்பட்ட ஐ, ஜே, கே., கேலரிகள் கடந்த 2012 முதல் தடைவிதிக்கப்பட்டு மூடப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இறுதி போட்டியை இங்கு நடத்தினால் பல கோடி நஷ்டம் ஏற்படும் என்பதால் ஹைதராபாத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

IPL 2019

நடப்பு சாம்பியன் அணி என்ற அடிப்படையில் இறுதி போட்டி சென்னையில் நடக்கயிருந்தது. இறுதி போட்டிக்கு முன்பாக, தமிழக கிரிக்கெட் சங்கம் தமிழக அரசின் அனுமதியை பெற்று அந்த கேலரிகளை திறக்கும் என்று பிசிசிஐ காத்திருந்தது. ஆனால் தற்போதுவரை அரசின் அனுமதி பெற தமிழக கிரிக்கெட் சங்கம் தவறிய காரணத்தால், வேறு வழி இல்லாமல் இறுதிப்போட்டியை ஐதராபாத்துக்கு மாற்றியுள்ளது பிசிசிஐ.

ஆனால் நாக் அவுட் போட்டிக்கு முதல் இரண்டு இடத்துக்குள் சென்னை அணி வரும் பட்சத்தில் முதல் குவாலிபயர் போட்டி சென்னையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் மே 8 மற்றும் மே 10ல் நடக்கவுள்ள எலிமினேட்டர் மற்றும் இரண்டாவது குவாலிபயர் போட்டிகள் விசாகப்பட்டினத்தில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

IPL 2019

நாட் அவுட் போட்டி அட்டவணை: 
மே 7 முதல் குவாலிபயர், சென்னை
மே 8 எலிமினேட்டர், விசாகப்பட்டினம்
மே 10 இரண்டாவது குவாலிபயர், விசாகப்பட்டினம்
மே 12 ஃபைனல், ஹைதராபாத்.