ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் நேற்றய போட்டியில் யாருக்கு ஆதரவு அளித்தார்கள் தெரியுமா?indiyan-fans-suport-to-final-match


கடந்த மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் துவங்கிய உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சூப்பர் ஓவர் முடிந்தும் அதிகமான பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் உலக கோப்பையை வென்றது.

நேற்றைய இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து  241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிய 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது.

நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் டையில் முடிந்ததால் அதிக பவுண்டரிகள் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

England vs Newzland

நேற்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணிதான் வெற்றி பெறவேண்டும் என ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் ஆதரவு அளித்தனர். நேற்றய ஆட்டம் டையில் முடிந்தபோது தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் பட்டாசு வெடித்து விசில் போட்டு கொண்டாடியுள்ளனர். நேற்றய ஆட்டத்தில் இந்திய ரசிகர்கள் நியூசிலாந்து அணியை இந்திய அணி  ஆடுவது போலவே ரசித்துவந்தனர்.

நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் 15-15 ரன்களால் டையில் முடிந்தது. இதனால் அதிக பவுண்டரிகள்(24/16) அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கினர்.