இந்திய கிரிக்கெட் ரசிகர்களே எங்களையும் கொஞ்சம் பாருங்கள்! உலககோப்பையின் முதல் ஆட்டத்திலே ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களே எங்களையும் கொஞ்சம் பாருங்கள்! உலககோப்பையின் முதல் ஆட்டத்திலே ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி!


indian women cricket team won first match

மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இன்று சிட்னியில் நடந்த முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா -இந்திய அணிகள் மோதின.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வீர மங்கை தீப்தி சர்மா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியின் ஜெஸ் ஜோனாசென் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தநிலையில் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19வது ஓவரில் 115 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இந்திய அணியின் பூனம் யாதவ் அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி-20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.