
indian cricketer - yuvraj singh - retierd - dhavan - sowmia sarkar
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டர், அதிரடி ஆட்டக்காரர் யார் என்றல் அனைவரும் யுவராஜ் சிங்கை தான் கூறுவார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியில் இவர் மிக முக்கியமான வீரராக இருந்தார்.
2000-ம் ஆண்டில் இந்திய அணியில் ஒருநாள் போட்டிக்காக அறிமுகமானவர் யுவராஜ் சிங். அதிரடி பேட்டிங்க்கு பெயர் போன இவர், ஒரே ஓவரில் 6 பந்துகளுக்கு 6 சிக்சர்கள் அடித்து உலகத்தையே திரும்பி பார்க்கவைத்தார். பல போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாகவும் யுவராஜ் இருந்துள்ளார். 2011 உலகக்கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்து தொடர் நாயகன் விருதை யுவராஜ் பெற்றார்.
இந்நிலையில் ஓய்வை அறிவித்த யுவராஜ் சிங்கிற்கு இந்திய அணி வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரிடமிருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் இருந்தன. அதில் இந்திய வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பதிவில்: நான் பார்த்ததிலேயே நீங்கள்தான் சிறந்த இடதுகை பேட்ஸ்மேன், உங்கள் ஸ்டைல் மற்றும் பேட்டிங் முறையைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். உங்களது அடுத்த பயணத்துக்கு வாழ்த்துகள் என்று கூறியிருந்தார்.
இவ்வாறு ஷிகர் தவான் பதிவிட்ட ஆறு மணி நேரத்திற்குப் பிறகு வங்கதேச வீரர் சௌமியா சர்க்கார் அதே போன்றதொரு பதிவை பதிவிட்டு யுவராஜ் சிங்கிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதனை நோட்டமிட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை கூட சொந்தமாக தெரிவிக்காமல் இவ்வாறு காப்பி அடித்து தான் தெரிவிக்க வேண்டுமா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement