இந்தியா விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்.! டாஸ் வென்ற விராட்கோலியின் அதிரடி முடிவு.!

Summary:

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டி

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 

இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தநிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியுள்ளது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்தநிலையில், இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுகிறது. 

இந்திய அணி வீரர்கள்:

ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரகானே, ரிஷப் பண்ட், அக்சர் படேல், அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, முகம்மது சிராஜ்.

இங்கிலாந்து அணி வீரர்கள்:

ரோரி பர்ன்ஸ், டொம்னிக் சிப்லே, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஆலி போப், பென் ஃபோக்ஸ் மோயின் அலி, பிராட், ஜாக் லீச், ஆலி ஸ்டோன்.


Advertisement