ஆமை வேகத்தில் ஆட்டத்தை நகர்த்திய கே.எல்.ராகுல்!.. பொறுமை இழந்த ரசிகர்கள்..!

ஆமை வேகத்தில் ஆட்டத்தை நகர்த்திய கே.எல்.ராகுல்!.. பொறுமை இழந்த ரசிகர்கள்..!



india-won-the-first-t20-match-by-8-wickets-against-sout

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி-20 போட்டி கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்ட் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச தீர்மானித்தார். இதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணிக்கு குயின்டன் டி காக்-கேப்டன் பவுமா ஜோடி தொடக்கம் அளித்தது. தீபக் சஹர் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் கேப்டன் பவுமா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதன் பின்னர் 2 வது ஓவரில் குயின்டன் டி காக் (1 ) ரிலீ ரோஸோ (0), டேவிட் மில்லர் (0) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றிய அர்ஷ்தீப் அந்த அணியின் முதுகெலும்பை உடைத்தார்.

இதன் காரணமாக அந்த அணி 9 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு முனையில் போராடிய எய்டன் மார்க் ராம் 25 ரன்களில் வெளியேற, இறுதிக்கட்டத்தில் ஜோடி சேர்ந்த பர்னல்-கேசவ் மகராஜ் ஜோடி அதிரடியாக விளையாடி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். 20 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணியில் கேசவ் மகராஜ் அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் 3 விக்கெட்களையும், தீபக் சஹர் ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

107 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கே.எல்.ராகுல்-ரோஹித் சர்மா ஜோடி தொடக்கம் அளித்தது. 3 வது ஓவர் வரை களத்தில் இருந்த கேப்டன் ரோஹித் சர்மா டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் வந்த விராட் கோலி 9 பந்துகளை சந்தித்து 3 ரன்களுடன் வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

மறுமுனையில் ஆமை வேகத்தில் விளையாடி வெறுப்பேற்றிய கே.எல்.ராகுல் ஓரு கட்டத்தில் பட்டாசாய் வெடிக்க இந்திய அணி வெற்றியை நோக்கி வேகமாக பயணித்தது. சூர்ய குமார் யாதவ், கே.எல்.ராகுல் இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். 16.4 ஓவர்களில் இந்திய அணி இலக்கை வெற்றிகரமாக சேஸ் செய்தது. இதன் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கோண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.