அசுரத் தாண்டவம் ஆடிய விராட், ரோகித் சதம்; இந்தியா அபார வெற்றி!

அசுரத் தாண்டவம் ஆடிய விராட், ரோகித் சதம்; இந்தியா அபார வெற்றி!


India won by 8 wickets in first odi against wi

இந்தியா மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சார்பில் ரிஷப் பண்ட் அறிமுகமாகினார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீசுவதாக அறிவித்தார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பவல் மற்றும் ஹேம்ராஜ் களமிறங்கினர். ஆட்டத்தின் துவக்கம் முதலே பவல் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். மறுமுனையில் நிதானமாக ஆடி வந்த ஹேம்ராஜ் 5-வது ஓவரில் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்துவந்த அவருடன் ஜோடி சேர்ந்த ஹோப் நிதானமாக ஆடினார்.

Ind vs wi first odi

39 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்சர்களை விளாசிய பவல் 51 ரன்கள் எடுத்த நிலையில் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 84 ஆகா இருந்தது. அவரை தொடர்ந்து வந்த சாமுவேல் ரன் ஏதும் எடுக்காமல் சாஹால் பந்துவீச்சில் வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மயர் ஆரம்பத்தில் நிதானமாக ஆடி வந்தார். அரைசதம் கடந்த அவர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். 78 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் விளாசி சதமடித்த ஹெட்மயர் 106 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

Ind vs wi first odi

39 வது ஓவரில் ஹெட்மயர் ஆட்டமிழக்கும் போது அணியின் எண்ணிக்கை 248 ஆக இருந்தது. பின்னர் வந்த கேப்டன் ஹோல்டர், பிஷூ, ரோச் ஆகியோர் கைகொடுக்க மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 322 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. 

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் தவான் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். 

Ind vs wi first odi

அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆரம்பமே அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ரோகித் சர்மாவும் கோலியும் இணைந்து மேற்கிந்திய தீவுகள் அணியினரின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். 

அதிரடியாக ஆடிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் 36 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 33 ஆவது ஓவரில் கோலி 140 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 107 பந்துகளில் 21 பவுண்டரிகள் 2 சிக்சர்களை விளாசி கோலி 140 ரன்கள் எடுத்தார். 

Ind vs wi first odi

கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும்  சதம் விளாசினார். இது அவரது 20வது ஒருநாள் சதமாகும். 42.1 ஓவரில் 326 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. 

இறுதி வரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக ஆடிய ரோகித் 152 ரன்கள் எடுத்தார். அவர் 15 பவுண்டரிகளையும் 8 சிக்சர்களையும் விளாசினார். அம்பத்தி ராயுடு 22 ரன்கள் எடுத்தார்.